எனினும், குரல் நடிகர் கென்ஜிரோ சூடா தாக்கல் செய்த கோரிக்கையை டோக்கியோ மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தது. தமது குரலைப் போன்ற AI உருவாக்கிய குரலைப் பயன்படுத்திய வீடியோக்களை TikTok அகற்ற வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
188 வீடியோக்கள் தொடர்பான சர்ச்சை
‘Jujutsu Kaisen’ அனிமே தொடரில் கென்டோ நனாமி கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்ததன் மூலம் சூடா பிரபலமானவர். 2024 ஜூலை முதல் 2025 செப்டம்பர் வரையிலான காலத்தில், நகர்ப்புறக் கதைகள், மர்மவியல் மற்றும் பல்வேறு தகவல்கள் தொடர்பான 188 வீடியோக்கள் அவரது குரலை ஒத்த AI குரலில் பதிவேற்றப்பட்டதாக வழக்கு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டது.
சூடாவின் உண்மையான குரலுக்கும் AI குரலுக்கும் வலுவான ஒற்றுமை இருப்பதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்ததாகக் கூறப்பட்டது. இதனால் பார்வையாளர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாகவும், அந்தக் குரலின் வணிக மதிப்பைப் பயன்படுத்தி மாதந்தோறும் 500,000 முதல் 750,000 ஜப்பானிய யென் வரை வருமானம் ஈட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த Japan AI voice cloning case-ல், வீடியோக்களில் பயன்படுத்தப்பட்டது பொதுவான ஆண் குரல் என்றும், அதை சூடாவின் குரல் என பார்வையாளர்கள் தவறாக எண்ணமாட்டார்கள் என்றும் TikTok தெரிவித்தது. வீடியோ பதிவிட்டவர், நண்பரின் குரலைப் பயன்படுத்தி AI-க்கு பயிற்சி அளித்ததாகக் கூறினார். ஜூன் 29ஆம் தேதிக்குள் கணக்கு நீக்கப்பட்டதால் வழக்கைத் தொடர போதிய அடிப்படை இல்லை என்றும் வாதிடப்பட்டது.
ஜப்பானில் குரல் உரிமைகளைத் தெளிவாக வரையறுக்கும் சட்டம் தற்போது இல்லை. இருப்பினும், உண்மையான நபர்களின் குரலை ஒத்த குரல்களில் வீடியோக்களை வெளியிட்டு வருமானம் ஈட்டுவது உரிமை மீறலாக இருக்கலாம் என்று அந்நாட்டு நீதித்துறை அமைச்சகம் அண்மையில் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.






























