கட்டுமானப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை (11) ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். பணிகள் நிறைவடைந்ததும், உள்ளூர் மக்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்கள் எந்தக் கட்டணமும் இன்றி மைதானத்தைப் பயன்படுத்தி விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குப்பை கொட்டப்பட்ட இடத்தில் உருவாகும் விளையாட்டு மைதானம்
முன்னர் கைவிடப்பட்ட குப்பை கொட்டும் இடமாக இருந்த பகுதி, பொதுமக்களின் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் நவீன மைதானமாக மாற்றப்பட்டு வருகிறது. Nawinna Sports Ground திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2025 நவம்பர் 13ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது.
தற்போது கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்தி, விளையாட்டு கலாசாரத்தை ஊக்குவிக்கும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த அபிவிருத்திப் பணிக்கு அப்பகுதி மக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.




























