நெல்சன் முதலில் சொன்ன மறுப்பு
பொதுவாக இரண்டாம் பாகங்களை உருவாக்குவதில் தனக்கு அதிக ஆர்வம் இல்லை என்று ரஜினிகாந்த் கூறினார். ‘பாட்ஷா’ மற்றும் ‘பேட்ட’ படங்களின் இரண்டாம் பாகங்களுக்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டும், தாம் சம்மதிக்கவில்லை என்றார்.
‘ஜெயிலர்’ படத்தை பின்னர் பார்த்தபோது, வர்மாவுடன் தொடர்புடைய சர்வதேச கேங், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று கண்டெய்னர்கள், அரசாங்கம் மற்றும் கைதிகள் மத்தியில் ஜெயிலர் கதாபாத்திரத்துக்கு உள்ள செல்வாக்கு ஆகியவை தொடர்ச்சிக்கான வாய்ப்பை உருவாக்குவதாகத் தோன்றியதாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.
முதலில் ‘ஜெயிலர் 2’ வேண்டாம் என்று நெல்சன் கூறியதாகவும், ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் தொடர்புகொண்டு படத்தை உருவாக்கலாம் என்று தெரிவித்ததாகவும் அவர் கூறினார். நெல்சன் போதிய காலம் எடுத்துக்கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். Jailer 2 release நிகழ்வை முன்னிட்டு, படம் நன்றாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டுவதாகவும் அவர் கூறினார்.
இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ், வித்யாபாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மோகன்லால் மற்றும் சிவ ராஜ்குமார் கவுரவ வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், ஆர்.நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.





























