நைட் சிட்டியை மையமாகக் கொண்ட திரைப்படத் திட்டம்
இந்த Cyberpunk 2077 movie-யின் உலகம், எதிர்கால கலிபோர்னியாவில் உள்ள டிஸ்டோப்பிய நகரமான நைட் சிட்டியை மையமாகக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சக்திவாய்ந்த பெருநிறுவனங்கள், குறிப்பாக அரசாகா கார்ப்பரேஷன், அந்த உலகின் முக்கிய அம்சங்களாக உள்ளன.
2020ஆம் ஆண்டு இறுதியில் வெளியான Cyberpunk 2077 விளையாட்டு, வி என்ற கூலிப்படையினரின் கதையைச் சொல்கிறது. அவரது உடலில் பொருத்தப்பட்டுள்ள நரம்பியல் சிப்பில், கிளர்ச்சியாளரும் இசைக்கலைஞருமான ஜானி சில்வர்ஹேண்டின் டிஜிட்டல் நினைவுரு பதிவாகியுள்ளது. அந்தக் கதாபாத்திரத்தில் கீனு ரீவ்ஸ் நடித்திருந்தார்.
வெளியீட்டின் போது தொழில்நுட்பக் கோளாறுகள், செயலிழப்புகள் மற்றும் கிராபிக்ஸ் குறைபாடுகள் காரணமாக விளையாட்டு கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. குறிப்பாக பிளேஸ்டேஷன் 4 மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன் பதிப்புகளில் சிக்கல்கள் அதிகமாக இருந்தன. பின்னர் பல்வேறு புதுப்பிப்புகள் மூலம் விளையாட்டு நிலைப்படுத்தப்பட்டது. அடிப்படை விளையாட்டு உலகளவில் 4 கோடிக்கும் அதிகமான பிரதிகளையும், ‘Phantom Liberty’ விரிவாக்கம் 1.5 கோடிக்கும் அதிகமான பிரதிகளையும் விற்றுள்ளன.
திரைப்படத்தின் திரைக்கதை, இயக்குநர் மற்றும் நடிகர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தத் திட்டம், 1990ஆம் ஆண்டு வெளியான ‘Cyberpunk 2020’ மேசை விளையாட்டைத் தொடர்ந்து உருவான பிரபஞ்சத்தின் மற்றொரு திரை வடிவமாகும்.


































