கடந்த 6ஆம் திகதி காலை சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமைக்கு பின்னர் கைதிகளுக்கு உணவு வழங்கச் சென்ற அதிகாரிகள் மீது கைதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. முதலில் ஒரு சிறைச்சாலை அதிகாரி மீது கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் பின்னர் நிலைமையைக் கட்டுப்படுத்த அங்கு சென்ற புதிய பிரதான ஜெயிலர் மற்றும் ஏனைய அதிகாரிகளும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
சில அதிகாரிகளின் தலை மீது பெரிய கற்களை வீசி கொடூரமாக தாக்கியதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வன்முறைச் சம்பவத்தில் மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நாட்டின் சிறைச்சாலை பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் தொடர்பிலும் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.































