இந்த வன்முறையில் ஏற்கனவே 7 சிறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 27 பேர் உயிரிழந்திருந்த நிலையில் இந்தியப் பிரஜையின் மரணம் தொடர்பான தகவல் தற்போது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. வன்முறையைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பல கைதிகள் நாட்டின் பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடாத போதிலும் இலங்கை வெளிவிவகார அமைச்சகத்துக்கு இந்திய அரசால் விளக்கம் கோரி அறிக்கையொன்று அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதை இலங்கையின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தி ஹிந்து தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து இரு நாடுகளின் அதிகாரிகளும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர்.






























