35 வயதான அல்ஃபோசன் சவுதி நாட்டைச் சேர்ந்த பொறியாளர். அவர் சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் அடிக்கடி தொடர்பில் இருந்ததாகவும், கைது செய்யப்பட்ட பின்னர் அவரது மனைவி மற்றும் மகனுக்கான ஒருவழிப் பயணச் செலவை சவுதி இராணுவ அதிகாரி ஒருவர் ஏற்றதாகவும் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் அவர் விசாரணைக்கு முன் அமெரிக்காவை விட்டு வெளியேறக்கூடும் என அரசு தரப்பு வாதிட்டுள்ளது.
கூட்டறையில் கண்டுபிடிக்கப்பட்ட சாதனம்
அல்ஃபோசன் சுமார் ஓராண்டு OpenAI நிறுவனத்தில் பணியாற்றியிருந்தார். செப்டம்பர் 30 அன்று, கூட்டறையில் இருந்த தொலைக்காட்சியின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒலிப்பதிவு சாதனம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அக்டோபர் 5 அன்று, அந்த இடத்தைப் பார்ப்பது போன்ற காட்சிகள் கேமராவில் பதிவாகின. அக்டோபர் 9 அன்று FBI அவரைக் கைது செய்ததுடன், நிறுவன ஒப்பந்தமும் நிறுத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட மறுநாள், அவரது மனைவியும் மகனும் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கட்டார் நாட்டின் தோஹாவுக்கு ஒருவழி வணிக வகுப்பு பயணச்சீட்டில் சென்றதாக ஆவணம் தெரிவிக்கிறது. OpenAI recording device case-ல் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அல்ஃபோசனுக்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 250,000 டொலர் அபராதமும் விதிக்கப்படலாம்.






























