மேலும் 2025ஆம் ஆண்டில் மட்டும் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் இலங்கைக்கு 8.2 பில்லியன் அமெரிக்க டொலரை பணஅனுப்பீடாக அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது நாட்டின் அந்நியச் செலாவணி வருவாயை வலுப்படுத்துவதிலும் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.தற்போதைய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் கூட வெளிநாட்டு இலங்கை தொழிலாளர்கள் தாய்நாட்டின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து தங்களது உழைப்பையும் வருமானத்தையும் பகிர்ந்து வருகின்றனர் என்றும் அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார்.Sri Lanka News
வெளிநாட்டு வேலைவாய்ப்பின் மூலம் கிடைக்கும் பணஅனுப்பீடுகள் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இதனால் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் தொழில்வாய்ப்பு வாய்ப்புகளை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.






























