மருத்துவமனையில் மீண்டும் ஏற்பட்ட மோதல்
பரமக்குடி சரக காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பார்த்திபனூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றியவர் கண்ணகி. 35 வயதான அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
நேற்று, பரமக்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கண்ணகிக்கு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. இரவு 8 மணியளவில், மருத்துவமனைக்கு வெளியே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சில இளைஞர்கள் சிகிச்சைக்காக அங்கு வந்தனர். பின்னர் மருத்துவமனைக்குள் இரண்டு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த கண்ணகி, மோதலில் ஈடுபட்டவர்களைத் தடுக்க முயன்றார். அந்த நேரத்தில் சண்டையில் ஈடுபட்ட கருப்பு ராஜா என்பவர் அவரைக் கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. நிலைதடுமாறி விழுந்த கண்ணகியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். தகவலறிந்த போலீஸார், கண்ணகியைத் தள்ளியதாகக் கூறப்படும் கருப்பு ராஜாவைக் கைது செய்தனர். இந்த Paramakudi woman police death சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.





























