டிசம்பர் 15 முதல் பயன்பாட்டுக்கும் தடை
காகித டிக்கெட்டை நிறுத்தும் நடவடிக்கை 2022ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அது நீண்ட காலமாகப் பயணிகளிடம் தொடர்ந்துப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில் பாரிஸ் பொதுப் போக்குவரத்து நிறுவனமான RATP, பிளாஸ்டிக் அட்டைகள் மற்றும் செயலிகள் உள்ளிட்ட மாற்று முறைகளைச் சோதித்து வந்தது.
பிரெஞ்சு தலைநகருக்கு வரும் பல சுற்றுலாப் பயணிகளுக்கு Paris paper metro ticket எளிமையான தேர்வாக இருந்தது. செயலியைப் பயன்படுத்துவது சிக்கலானதாக இருப்பதாகவும், நகருக்குள் பயணிக்க வேண்டிய நேரத்தில் தவறுதலாக அதிக விலையுள்ள விமான நிலைய டிக்கெட்டைச் செயல்படுத்திவிடும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டது.
காகித டிக்கெட் விற்பனை முடிவடைவதால், பாரிஸ் வருகையாளர்கள் பலர் நினைவுப் பொருளாக வைத்திருந்த இந்த டிக்கெட்டையும் இனி பெற முடியாது.




























