மின்சார மயக்க முறையில் விதிமீறல் சந்தேகம்
கம்புங் ஸ்ரீ அமான் ஹிலிரில் உள்ள அந்த ஆலையில், நீர்த் தொட்டி மின்சார மயக்க முறை பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்புறத்தின் முதல் வாயிலில் 60 வோல்ட்டும், நடுப்பகுதியில் உள்ள இரண்டாவது வாயிலில் 130 வோல்ட்டும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை நிர்ணயித்துள்ள அளவு 10 வோல்ட்டுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
அதிக மின்சார அழுத்தம் காரணமாக, அறுக்கும் முன்பே கோழிகள் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது கோழிப் பொருளின் ஹலால் நிலையை நிர்ணயிக்கும் முக்கிய அம்சத்துடன் தொடர்புடையதாகும்.
சுங்கை செபாட், சுங்கை பெலேக், செபாங் பகுதிகளில் இருந்து உயிருள்ள கோழிகள் கொண்டுவரப்பட்டு, பின்னர் டாமன்சாரா, பாங்கி, புச்சோங், செராஸ், புத்ரா பெர்டானா மற்றும் புத்ராஜெயாவில் உள்ள உணவகங்கள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. Puchong chicken processing plant-ன் முழுமையான விநியோக வலையமைப்பையும் காவல்துறை அடையாளம் கண்டு வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 12.40 மணிக்கு நடத்தப்பட்ட சோதனையில், செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாத 12 வங்கதேச ஆண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நவம்பர் 13ஆம் தேதி வரை 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆலையின் உள்ளூர் உரிமையாளரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் துறை செயல்பாட்டு உபகரணங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கோழிகள் அகற்றப்படும் வரை ஷா ஆலம் நகரில் உள்ள சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறையில் வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 6.5 டன் மூலக் கோழிகள், RM85,400 மதிப்பில் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு Trade Descriptions (Definition of Halal) Order 2011-ன் பிரிவுகள் 3(1)(A), 4(1) மற்றும் Environmental Quality Act 1974-ன் பிரிவு 38(1) கீழ் விசாரிக்கப்படுகிறது.




























