நாட்டின் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி மற்றும் வினைத்திறனுடன் முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த விடுமுறை 2026 ஏப்ரல் 8 முதல் அமலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமுமான பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இதற்கான அறிவிப்பு PS/COS/02/01/26/30 என்ற கடித எண்ணில் 2026.04.06 திகதியிட்டுக் ராஜ்ய பரிபாலன உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு நீதிச் சேவை ஆணைக்குழு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்திற்கும் இதற்கான பிரதிகள் அனுப்பப்பட்டுள்ளன.






























