திருகோணமலை சலப்பயாறு பிரதேசத்திலிருந்து புல்மோட்டை கனிய மணல் தொழிற்சாலைக்கு கரிமண் ஏற்றிய நிலையில் தினமும் அதிக அளவிலான டிப்பர் வாகனங்கள் தொடர்ச்சியாகப் பயணித்து வருவதாகவும்
இந்த நிலையில் இன்று கரிமண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்று புடவைக்கட்டு பகுதியில் பஸ்ஸின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த வீதியில் அதிக எண்ணிக்கையிலான டிப்பர் வாகனங்கள் தொடர்ச்சியாகப் பயணித்து வருவதால் வீதிப் பாதுகாப்பு மற்றும் வாகனங்களின் போக்குவரத்து தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.




























