Tag: Trincomalee
புடவைக்கட்டில் பஸ்ஸுடன் டிப்பர் மோதி விபத்து தொடர்பில் வீதிப் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் கவனம் எழுந்துள்ளது. திருகோணமலை சலப்பயாறு பிரதேசத்திலிருந்து புல்மோட்டை கனிய மணல் தொழிற்சாலைக்கு கரிமண் ஏற்றிய நிலையில் தினமும் அதிக அளவிலான டிப்பர் வாகனங்கள் தொடர்ச்சியாகப் பயணித்து வருவதாகவும் இந்த நிலையில் இன்று கரிமண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்று புடவைக்கட்டு பகுதியில் பஸ்ஸின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வீதியில் அதிக எண்ணிக்கையிலான டிப்பர் வாகனங்கள் தொடர்ச்சியாகப் பயணித்து வருவதால் […]
சம்பூரில் காணாமல் போனோர், திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் கடந்த காலங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து ஆவணப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மூதூர் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சம்பூர் பகுதியில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற இந்த பதிவுச் செயற்பாட்டில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதன்போது, கடந்த காலங்களில் காணாமல் போன தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்பான விபரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர்கள் பதிவு செய்துள்ளனர். திருகோணமலை மாவட்ட அரசாங்க […]
மூதூரில் கோர விபத்து, மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் ஜின்னாநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இடம்பெற்ற கோர சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ரிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் மூதூர் கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ் (21) மற்றும் அருணவன் செல்வரெத்தினம் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரில் ஒருவர் பல்கலைக்கழக மாணவராகவும் […]
திருகோணமலை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீரூற்று தொல்பொருள் வளாகத்தில் புத்த விகாரை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரசின் முக்கிய பிரதிநிதிகளும் தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புதிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என திருகோணமலை மேல்நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்த போதிலும் அந்த உத்தரவை மீறி புராதன பிள்ளையார் ஆலய இடிபாடுகள் […]
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் நச்சுத்தன்மை கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஆமணக்கு விதைகளை உட்கொண்டதன் காரணமாக தரம் 06-இல் கல்வி பயிலும் 22 பாடசாலை மாணவர்கள் திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 20 மாணவர்களும் 2 மாணவிகளும் முதலில் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். ஆரம்ப சிகிச்சைகள் வழங்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனைத்து மாணவர்களும் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மாணவர்கள் ஆமணக்கு விதையை உட்கொண்டிருக்கலாம் […]
திருகோணமலை மாவட்டத்தின் மொரவெவ குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்ற 63 வயதுடைய ஒருவர் நேற்று (ஜூலை 17) சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் திருகோணமலை நாமல்வத்தை பகுதியைச் சேர்ந்த முகம்மது உசன் ஜபருள்ளா கான் (63) என அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலிஸ் தகவலின்படி அவர் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 16) காலை சுமார் 10.00 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் மொரவெவ குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். […]
மூதூர் மணற்சேனை படுகொலை யில் உயிரிழந்த 44 பொதுமக்களை நினைவுகூரும் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (16) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. பெரும்பாலானோர் மென்கமம் கங்குவேலி மல்லிகைத்தீவு ஆகிய கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்த பொதுமக்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள். 1986 ஜூலை 16/18 அன்று உயிரிழந்த பொதுமக்களின் நினைவாக மூதூர் மணற்சேனை இந்து மயான முன்றலில் இந்த நிகழ்வு நடைபெற்றது. உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களே இந்நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்வின் போது உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக ஒரு […]
உலகின் சிறந்த 50 உணவு சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் இலங்கை இடம்பிடித்துள்ளதாக Travel and Tour World நிறுவனம் 2026 ஆம் ஆண்டுக்கான தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த தரவரிசையில் மெக்ஸிகோ முதலிடத்தையும் இத்தாலி இரண்டாம் இடத்தையும் ஸ்பெயின் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ள நிலையில் இலங்கை 50ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பரபரப்பான வீதி உணவுக் கடைகள் முதல் கடற்கரையோர உயர்தர உணவகங்கள் வரை பல்வேறு சுவை அனுபவங்களை வழங்கும் நாடாக இலங்கை பாராட்டப்பட்டுள்ளது. உணவுக் கலாசார […]
Sri Lanka News,ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பயண வசதிக்காக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) விசேட பேருந்து சேவைகளை ஆரம்பித்துள்ளது.இந்த விசேட சேவைகள் கொழும்பிலிருந்து கதிர்காமம் வரை மட்டுமின்றி கிழக்கு மாகாணம் மற்றும் மலையக பகுதிகளில் இருந்து கதிர்காமம் நோக்கியும் முன்னெடுக்கப்படுகின்றன.பயணிகள் தங்களது இருக்கைகளை SLTBயின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் வசதிக்காக கதிர்காம பேருந்து நிலையத்தில் இரண்டு டிக்கெட் […]
Sri Lanka News,மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (10) இடைக்கிடையே பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை நிலை தொடரும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அதிக […]