1986 ஜூலை 16/18 அன்று உயிரிழந்த பொதுமக்களின் நினைவாக மூதூர் மணற்சேனை இந்து மயான முன்றலில் இந்த நிகழ்வு நடைபெற்றது. உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களே இந்நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்வின் போது உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து நினைவுத் தீபங்கள் ஏற்றப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்திய உறவினர்களும் பொதுமக்களும் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தனர்.
1986 ஜூலை மாதத்தில் மூதூர் மணற்சேனை மற்றும் பெருவெளி பகுதிகளில் இராணுவத்தின் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது 44 பொதுமக்கள் கைது செய்யப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்தச் சம்பவத்தின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.






























