கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் இருந்து பாரம்பரிய பாத யாத்திரை மூலம் கதிர்காமம் வரும் பக்தர்கள் மற்றும் கொழும்பு, கண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சாதாரண போக்குவரத்து வழிகளில் பயணிக்கும் பக்தர்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்த விசேட சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன்படி கதிர்காமத்திலிருந்து மட்டக்களப்பு, பாணம, திருகோணமலை, மூதூர், வாழைச்சேனை, பொத்துவில், அக்கரைப்பற்று, வாகரை மற்றும் கல்முனை உள்ளிட்ட பகுதிகளுக்கு விசேட பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.பக்தர்களின் பாதுகாப்பான மற்றும் சிரமமற்ற பயணத்தை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும் என SLTB தெரிவித்துள்ளது.Sri Lanka News
கதிர்காம பக்தர்களுக்காக விசேட பேருந்து சேவை ஆரம்பம்
Sri Lanka News,ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பயண வசதிக்காக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) விசேட பேருந்து சேவைகளை ஆரம்பித்துள்ளது.இந்த விசேட சேவைகள் கொழும்பிலிருந்து கதிர்காமம் வரை மட்டுமின்றி கிழக்கு மாகாணம் மற்றும் மலையக பகுதிகளில் இருந்து கதிர்காமம் நோக்கியும் முன்னெடுக்கப்படுகின்றன.பயணிகள் தங்களது இருக்கைகளை SLTBயின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் வசதிக்காக கதிர்காம பேருந்து நிலையத்தில் இரண்டு டிக்கெட் முன்பதிவு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.































