Tag: Religious Festival
Devinuwara Perahera Security, மாத்தறை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேவிநுவரை ஸ்ரீ விஷ்ணு தேவாலய வருடாந்த பேரஹெராவில் இடம்பெறும் காவடி நடன நிகழ்ச்சியை இந்த ஆண்டு நீக்குவதற்கு பொலிஸார் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் குற்றக் குழுக்களுடன் தொடர்புடைய பதற்ற நிலைமைகளை கருத்தில் கொண்டு இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேரஹெராவில் பங்கேற்கும் காவடி குழுக்களைச் சுற்றி அண்மைய நாட்களில் சர்ச்சைகள் உருவானதுடன் தேவாலய நிர்வாகத்துக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும் துப்பாக்கிச் […]
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் இம்முறை திருவிழா காலத்தில் ஐந்து முக்கிய விடயங்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார். இதற்கான ஆரம்பகட்ட முன்னாயத்தக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் நடைபெற்றது. கடந்த ஆண்டுகளில் கிடைத்த முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவிழா காலத்தில் […]
இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் திருத்தலமான கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் திருவிழா புதன்கிழமை (15) மாலை 6.00 மணியளவில் கொடியேற்ற நிகழ்வுடன் சிறப்பாக ஆரம்பமானது. வழமையான மரபுப்படி கொடிக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டதையடுத்துகதிர்காம ஆலய வளாகத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற பால்குடிபாவா பள்ளிவாசலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு நான்கு முக்கிய சமயத் தலைவர்களின் ஆசியுரைகளின் மத்தியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் “அரோகரா” முழக்கத்துடன் புனிதக் கொடி ஏற்றப்பட்டது. இன மத, மொழி வேறுபாடுகளைத் தாண்டி நாட்டின் […]
Sri Lanka News,ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பயண வசதிக்காக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) விசேட பேருந்து சேவைகளை ஆரம்பித்துள்ளது.இந்த விசேட சேவைகள் கொழும்பிலிருந்து கதிர்காமம் வரை மட்டுமின்றி கிழக்கு மாகாணம் மற்றும் மலையக பகுதிகளில் இருந்து கதிர்காமம் நோக்கியும் முன்னெடுக்கப்படுகின்றன.பயணிகள் தங்களது இருக்கைகளை SLTBயின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் வசதிக்காக கதிர்காம பேருந்து நிலையத்தில் இரண்டு டிக்கெட் […]