பேரஹெராவில் பங்கேற்கும் காவடி குழுக்களைச் சுற்றி அண்மைய நாட்களில் சர்ச்சைகள் உருவானதுடன் தேவாலய நிர்வாகத்துக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றும் பதிவாகியிருந்தது. இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து பேரஹெராவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பொலிஸார் விசேட அதிரடிப்படை மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து விரிவான பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். Devinuwara Perahera Security
பெருமளவான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்கும் இந்த மத நிகழ்வின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதே முதன்மை நோக்கம் என பாதுகாப்பு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். காவடி நடனத்தை தற்காலிகமாக நீக்குவது தொடர்பான இறுதி முடிவு தேவாலய நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆலோசனையின் பின்னர் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.































