திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ரிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் மூதூர் கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ் (21) மற்றும் அருணவன் செல்வரெத்தினம் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரில் ஒருவர் பல்கலைக்கழக மாணவராகவும் விபத்தையடுத்து ரிப்பர் வாகனத்தின் சாரதி மூதூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். உயிரிழந்த இருவரின் சடலங்கள் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






























