உலகின் சிறந்த 50 உணவு சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் இலங்கை இடம்பிடித்துள்ளதாக Travel and Tour World நிறுவனம் 2026 ஆம் ஆண்டுக்கான தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த தரவரிசையில் மெக்ஸிகோ முதலிடத்தையும் இத்தாலி இரண்டாம் இடத்தையும் ஸ்பெயின் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ள நிலையில் இலங்கை 50ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
பரபரப்பான வீதி உணவுக் கடைகள் முதல் கடற்கரையோர உயர்தர உணவகங்கள் வரை பல்வேறு சுவை அனுபவங்களை வழங்கும் நாடாக இலங்கை பாராட்டப்பட்டுள்ளது. உணவுக் கலாசார பாரம்பரியம் பிராந்திய உணவுகளின் பன்முகத்தன்மை வீதி உணவுக் கலாசாரம் உள்ளூர் மூலப்பொருட்களின் பயன்பாடு நிலைத்தன்மை மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைக்கும் தனித்துவமான உணவு அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையில் உணவு சுற்றுலாவை அனுபவிக்க வேண்டிய 10 முக்கிய இடங்களாக கொழும்பு, காலி, கண்டி, நீர்கொழும்பு, எல்ல, யாழ்ப்பாணம், மிரிஸ்ஸ, நுவரெலியா, ஹிக்கடுவ மற்றும் திருகோணமலை ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன. குறிப்பாக உலகப் புகழ்பெற்ற யாழ்ப்பாண நண்டுக்கறி, காரசாரமான தமிழ் பாரம்பரிய உணவுகள், கொத்து ரொட்டி, ஆப்பம், கடல் உணவுகள் உள்ளிட்ட இலங்கையின் தனித்துவமான சமையல் மரபுகள் சர்வதேச அளவில் மீண்டும் கவனம் பெற்றுள்ளமை நாட்டின் சுற்றுலாத்துறைக்கும் உணவுக் கலாசாரத்திற்கும் மேலும் பெருமை சேர்த்துள்ளது.













Leave a Reply