IIF Report 2026, சர்வதேச நிதியமைப்பான Institute of International Finance (IIF) வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான முதலீட்டாளர் தொடர்புகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை (Investor Relations and Debt Transparency Report) அறிக்கையில் உலகின் மிகவேகமாக முன்னேறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 4வது இடத்தைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தரவரிசையில் வியட்நாம் முதலிடத்தையும் பெலிஸ் (Belize) இரண்டாவது இடத்தையும் மொசாம்பிக் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டாளர்களுடன் தொடர்புகளை மேம்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக IIF சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் கடன் வெளிப்படைத்தன்மைக்கான தனிப்பட்ட தரவரிசையில் இலங்கை 5வது இடம் வரை முன்னேறியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார சீர்திருத்தங்கள் நிதி மேலாண்மை மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளின் விளைவாக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.













Leave a Reply