சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

திருகோணமலை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீரூற்று தொல்பொருள் வளாகத்தில் புத்த விகாரை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரசின் முக்கிய பிரதிநிதிகளும் தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புதிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என திருகோணமலை மேல்நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்த போதிலும் அந்த உத்தரவை மீறி புராதன பிள்ளையார் ஆலய இடிபாடுகள் அமைந்துள்ள பகுதியில் விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

தமிழர்களின் வரலாறு மதம் மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்துடன் தொடர்புடைய இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானம் வரலாற்று அடையாளங்களை மாற்றும் முயற்சியாக இருப்பதாகவும் இதனால் பாரம்பரிய மரபுகள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மேலும் முந்தைய அரசுகளின் காலத்தில் மக்கள் எதிர்ப்பும் சட்ட நடவடிக்கைகளும் காரணமாக தடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கட்டுமானம் தற்போதைய ஆட்சியில் மீண்டும் முன்னெடுக்கப்படுவது ஏன் என்பதற்கும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்