பொருட்களை இறக்குமதி செய்வதாக போலி ஆவணங்கள் சமர்ப்பித்து அரசு மற்றும் தனியார் வங்கிகள் ஊடாக தந்தி வழி பணப் பரிமாற்றங்கள் (TT) மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதற்கான பொருட்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மோசடியில் மொத்தம் 105 நிறுவனங்கள் 227 வங்கிக் கணக்குகள் சுமார் 24,300 பணப் பரிமாற்றங்கள் மற்றும் 13 முக்கிய வங்கிகள் தொடர்புடையதாக விசாரணையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் நிறுவனங்களுடன் தொடர்புடைய 55 முக்கிய நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் முக்கிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். வங்கி அமைப்பு சுங்கத்துறை மற்றும் இறக்குமதி-ஏற்றுமதி கண்காணிப்பு முறைகளில் உள்ள பலவீனங்களே இவ்வளவு பெரிய தொகை நாட்டை விட்டு வெளியேற காரணமாக இருந்திருக்கலாம் என விசாரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் துறையால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




























