கைதுசெய்யப்பட்ட நபர் ரம்புக்கண பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது வசம் இருந்து சுமார் 13 கிலோ வெண்கல கம்பிகள் மீட்கப்பட்டுள்ளன. இவை சம்பவம் இடம்பெற்ற கோபுரத்திலிருந்து எடுத்தவை என நம்பப்படுகின்றன.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் ரம்புக்கண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலையைத் தொடர்ந்து தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகளை மீளமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கோபுரங்கள் சேதமடைந்த பகுதிகள் மற்றும் அணுக முடியாத இடங்களில் இதுபோன்ற கம்பி திருட்டுகள் பெரிய தடையாக உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
“தொலைபேசி மற்றும் இணைய சேவைகளை அவசரமாக மீள அமைப்பதற்கு தடையாக இருப்பதால், சந்தேகத்திற்கு இடமான பார்ப்பின் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கவும்,” என பொலிஸ் அறிவுறுத்தியுள்ளது.





























