ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையைச் சேர்ந்த சேகர்–பிரேமா தம்பதிக்கு மகேஸ்வரி என்ற ஒரு வயது பெண் குழந்தை இருந்தது. இவர்கள் குப்பைகளில் இருந்து பழைய பொருள்கள் மற்றும் பாட்டில்களைச் சேகரித்து, காயலான் கடையில் விற்று வாழ்வாதாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
வானாபாடி பகுதியில் குழந்தை மாயம்
கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி இரவு, ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வானாபாடி மாணிக்கம் நகர் பகுதியில் பழைய பொருள்களைச் சேகரித்துவிட்டு, தம்பதியினர் குழந்தையுடன் சாலையோரமாகத் தூங்கினர். நள்ளிரவு 1 மணியளவில் குழந்தை காணாமல் போனது தெரியவந்தது.
பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால், மறுநாள் செப்டம்பர் 24ஆம் தேதி சிப்காட் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். குழந்தையின் புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
தற்போது Ranipet missing baby case விசாரணை தனிப்படை மூலம் முன்னெடுக்கப்படுகிறது. குழந்தைக்கு என்ன ஆனது என்ற கவலையில் பெற்றோர் மிகுந்த வேதனையில் உள்ளனர். போலீஸாரும் இதுவரை உறுதியான தடயம் கிடைக்காமல் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.































