IPL 2026 தொடர், 3வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் எளிதாக தோற்கடித்தனர்.
முதலில் துடுப்பெடுத்த CSK அணி RR பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாட்டான பந்துவீச்சால் 19.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜெய்மி ஓவர்டன் 43 ரன்கள் எடுத்தது மட்டுமே CSK அணிக்கு சிறு ஆதரவாக இருந்தது.
பின்னர் 128 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி அரைசதத்தின் உதவியுடன் 12.1 ஓவர்களில் இலக்கை எட்டியது. ஆரம்பத்திலேயே வேகமாக ரன்கள் எடுத்ததால் போட்டி ஒருதலைப்பட்சமாக மாறியது. ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் நாண்ட்ரே பெர்கர் சிறப்பாக பந்து வீசி CSK அணியின் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்தினர்.































