September 9, 2026
Breaking News
USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இடம்பிடித்த அல்கராஸ்–ஷெல்டன் மோதல் வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் விரிவடைந்ததாக AIEA தகவல் மாஸ்கோவில் 90 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினருக்கு ‘அமினா’ செயலி கட்டாயம் ஆஸ்திரேலியாவின் 462 வேலை விடுமுறை விசா விண்ணப்பங்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம் ஹங்கேரி, போலந்து நாட்டினருக்கான அமெரிக்க குடியேற்ற விசா நடைமுறை மீண்டும் தொடக்கம் சியூட்டா குடியேற்ற நெருக்கடி: ஸ்பெயினுக்கு 115 மில்லியன் யூரோ அவசர உதவி 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இடதுசாரி முதன்மைத் தேர்தல் முடிவால் மரீன் தொந்தலியேர் அதிருப்தி பிரான்ஸில் ஆறு மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை பிரான்சில் அதிக ஓய்வூதியம் பெறுவோரிடம் கூடுதல் பங்களிப்பு திட்டம் எம்பாப்பே சகோதரர்களை கிண்டல் செய்த பெட்டிஸ் செவில்லா எலிசபெத் ஹோம்ஸின் சிறைத் தண்டனைக்கு முன் வாழ்க்கையை பதிவு செய்த ஆவணப்படம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இடம்பிடித்த அல்கராஸ்–ஷெல்டன் மோதல் வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் விரிவடைந்ததாக AIEA தகவல் மாஸ்கோவில் 90 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினருக்கு ‘அமினா’ செயலி கட்டாயம் ஆஸ்திரேலியாவின் 462 வேலை விடுமுறை விசா விண்ணப்பங்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம் ஹங்கேரி, போலந்து நாட்டினருக்கான அமெரிக்க குடியேற்ற விசா நடைமுறை மீண்டும் தொடக்கம் சியூட்டா குடியேற்ற நெருக்கடி: ஸ்பெயினுக்கு 115 மில்லியன் யூரோ அவசர உதவி 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இடதுசாரி முதன்மைத் தேர்தல் முடிவால் மரீன் தொந்தலியேர் அதிருப்தி பிரான்ஸில் ஆறு மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை பிரான்சில் அதிக ஓய்வூதியம் பெறுவோரிடம் கூடுதல் பங்களிப்பு திட்டம் எம்பாப்பே சகோதரர்களை கிண்டல் செய்த பெட்டிஸ் செவில்லா எலிசபெத் ஹோம்ஸின் சிறைத் தண்டனைக்கு முன் வாழ்க்கையை பதிவு செய்த ஆவணப்படம்
முகப்பு News செய்தி
மருந்துப் பொருள் மாபியாவுக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை – சஜித் பிரேமதாச
News

மருந்து மாபியாவை அரசாங்கம் ஒழிக்க வேண்டும்.. இல்லாவிட்டால் நாம் வீதிகளில் இறங்கி போராடுவோம் – சஜித்

📅 வெளியீடு: 29 Dec 2025 05:51 🔄 புதுப்பிப்பு: 29 Dec 2025 05:51 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

மருந்துப் பொருள் மாபியாவைத் தொடர்வதற்கு மக்கள் அரசாங்கத்திற்கு ஆணை வழங்கவில்லை. தரமற்ற மருந்துப் பொருட்கள் மோசடியை ஒழிப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த சகல நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சி பூரண ஆதரவைப் பெற்றுத் தரும்.

அடிப்படையானதும் மனித உரிமையாகவும் காணப்படும் சுகாதார நலன் கருதி, சேனக பிபில மருந்துக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டு மென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத் திட்டத்தின் கீழ், பதுளை மாவட்டம், மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு 46.5 இலட்சம் ரூபா மதிப்புள்ள வைத்தியசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

சில வருடங்களுக்கு முன்பு,இந்நாட்டில் மிகவும் ஊழல் நிறைந்த மற்றும் மோசடியான தரமற்ற மருந்து மோசடி நடந்து கொண்டிருந்த வேளை,அதை நாட்டுக்கு வெளிக்கொணர்ந்து, அம்பலப்படுத்தி, அப்போதைய சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கூட ஐக்கிய மக்கள் சக்தியே கொண்டு வந்தது.

அப்போது நடந்து வந்த இந்த தரமற்ற மருந்து மோசடிகள் புதிய அரசாங்கத்துடன் முடிவுக்கு வரும் என்றே கருதப்பட்டன. ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் கீழும் தரமற்ற இந்த மருந்து மாபியா தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் தரமற்ற தடுப்பூசிகளால் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தரமற்ற தடுப்பூசிகள் மற்றும் மருந்துப் பொருட்கள் கொள்வனவு மோசடி இன்றும் நடந்தே வருகிறது. மருந்துப் பொருட்கள் மோசடியைத் தொடர்வதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் தமது ஆணையைப் பெற்றுத் தரவில்லை.

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மஹியங்கனை ஆதார வைத்தியசாலை கடுமையாக சேதமடைந்தது.

ஐக்கிய மக்கள் சக்தி தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் தொடர்பில் குரல் எழுப்பிய சமயங்களில், தற்போதைய அரசாங்கத்தைச் சேர்ந்த அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இதற்கு ஆதரவு தெரிவித்து மௌனம் காத்து வந்தனர். தரமற்ற மருந்துப் பொருட்கள் கொள்வனவை நிறுத்துவோம் என்று தேர்தல் மேடைகளில் கோஷங்களை எழுப்பிய தற்போதைய ஆளும் தரப்பு அமைச்சர்கள், இன்று மக்களுக்கு தரமற்ற மருந்துகளையும் தடுப்பூசிகளையும் விநியோகித்து வருகின்றனர்.

தற்போதைய சுகாதார அமைச்சர் உட்பட அனைத்து சுகாதார அதிகாரிகளும் இந்த மருந்துப் பொருட்கள் மாபியாவை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த மருந்துப்பொருள் மாபியாவால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பரிதாபமாக பலியாகி வருகின்றன. மருந்துகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் போது, அவை தரமானதா,நுகர்வுக்கு ஏற்றனவா என தகுதிச் சான்றிதழ் வழங்கும் முன்னர், சுகாதார அமைச்சும் போலவே இந்த மருந்துகளின் தரம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிசோதனைகள் மூலமும் சர்வதேச நிறுவனங்கள் மூலமும் இவை ஆராயப்பட வேண்டும்.

நமது நாட்டில் இன்னும் மருந்துகளின் தரத்தை சரிபார்க்கக்கூடிய பரிசோதனை ஆய்வு கூடமோ வசதிகளோ இல்லை. இதற்கான ஆய்வு கூட வசதிகளை நாம் நிறுவ வேண்டும்.

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் தொடர்பான பொறுப்பிலிருந்து அமைச்சரும் உரிய அதிகாரிகளும் தப்பிக்க முடியாது. முன்னாள் அமைச்சரைப் போலவே தற்போதைய சுகாதார அமைச்சரும் இந்தப் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது.

220 இலட்சம் மக்கள் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் வீதிகளில் இறங்கி, இந்த தரமற்ற மருந்து மோசடியை நடத்தும் அனைவருக்கும் எதிராகவும் இந்த மாபியாவிற்கு எதிராகவும் பேராடும்.

அவ்வாறே, இந்த தரமற்ற மருந்துப் பொருட்கள் மோசடியை ஒழிப்பதற்கு இந்த அரசாங்கம் எடுக்கும் சிறந்த சகல நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சி பூரண ஆதரவைப் பெற்றுத் தரும். அடிப்படையானதும் மனித உரிமையாகவும் காணப்படும் சுகாதார நலன் கருதி, சேனக பிபில மருந்துக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த வைத்தியசாலையின் தேவைப்பாடுகளை அடையாளம் கண்டு ரூபா.38 இலட்சம் பெறுமதியான Dialog Single Pump ஒன்றும், ரூபா.7.6 இலட்சம் பெறுமதியான Blue dot RO System 600Gpd இயந்திரமொன்றும் இன்று இவ்வாறு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன. சிறுநீரக நோயாளிகளின் நலன் கருதியே இந்த உபகரணத் தொகுதிகள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல் தொடர்பாக பேசும் மரீன் தொந்தலியேர்
2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இடதுசாரி முதன்மைத் தேர்தல் முடிவால் மரீன் தொந்தலியேர் அதிருப்தி
09 Sep 2026
பிரான்ஸின் தென்கிழக்கில் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை
பிரான்ஸில் ஆறு மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை
09 Sep 2026
பிரான்சில் அதிக ஓய்வூதியதாரர்களுக்கான பட்ஜெட் மாற்றம்
பிரான்சில் அதிக ஓய்வூதியம் பெறுவோரிடம் கூடுதல் பங்களிப்பு திட்டம்
09 Sep 2026
பாரிஸ் கான்கோர்ட் சதுக்கத்தில் போப் லியோன் XIV திருப்பலிக்கான ஏற்பாடுகள்
பிரான்சில் லியோன் XIV: பாரிஸ் திருப்பலிக்கு தினமும் 8,000 பேர் பதிவு
09 Sep 2026
அமியான் நகரில் ரத்து செய்யப்பட்ட பார்பரா புட்ச் இசை நிகழ்ச்சி
அமியான் நகரில் பார்பரா புட்ச் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சி ரத்து
09 Sep 2026
பிரான்சில் உயர்ந்த எரிபொருள் விலையுடன் காணப்படும் பெட்ரோல் நிலையம்
எரிபொருள் விலை உயர்வு: பிரான்ஸ் அரசு புதிய பொதுவான உதவியை நிராகரிப்பு
09 Sep 2026
ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் போப் லியோ XIV பங்கேற்கும் இளைஞர் விழா
ஸ்டேட் டி பிரான்ஸ் விழாவுக்கு கடைசி இலவச இடங்கள்: காத்திருப்போருக்கு வாய்ப்பு
09 Sep 2026
Forbach செயின்ட் ரெமி தேவாலயத்தின் வெளிப்புறம்
பிரான்ஸ் தேவாலயத்தில் கத்தியுடன் நுழைந்தவர் கைது
09 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்
வெனிஸ் திரைப்பட விழாவில் கேசி மற்றும் பென் அஃப்லெக்
பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல்
09 Sep 2026
பெட்டிஸ் செவில்லா வீரர்கள் லில் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் வெற்றியை கொண்டாடும் காட்சி
எம்பாப்பே சகோதரர்களை கிண்டல் செய்த பெட்டிஸ் செவில்லா
09 Sep 2026
Elizabeth Holmes documentary production and film festival coverage
எலிசபெத் ஹோம்ஸின் சிறைத் தண்டனைக்கு முன் வாழ்க்கையை பதிவு செய்த ஆவணப்படம்
09 Sep 2026
வெனிஸ் திரைப்பட விழாவில் எலான் மஸ்க் ஆவணப்படம் குறித்து பேசும் ஆஷ்லி செயின்ட் கிளேர்
எலான் மஸ்க் குறித்து பேச 4 கோடி டாலர் ஒப்பந்தத்தை நிராகரித்த முன்னாள் காதலி
09 Sep 2026
சீன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சூர்யா
சூர்யா–ஜீத்து மாதவன் படத்துக்கு ‘சீன்’ எனத் தலைப்பு அறிவிப்பு
09 Sep 2026
நடிகை திவ்யா ஸ்பந்தனா திருமணம் குறித்து பேட்டியில் கருத்து தெரிவிக்கும் காட்சி
திருமணம் குறித்து திவ்யா ஸ்பந்தனா: “அப்படிப்பட்ட நபர் இன்னும் அமையவில்லை”
09 Sep 2026
Artificial திரைப்படத்தில் சாம் ஆல்ட்மேனாக நடிக்கும் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட்
சாம் ஆல்ட்மேன் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட்: ‘Artificial’ படத்தின் முதல் டிரெய்லர் வெளியீடு
09 Sep 2026
Julia Roberts returning to Broadway in Small Mouth Sounds
ஜூலியா ராபர்ட்ஸ் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிராட்வே மேடைக்குத் திரும்புகிறார்
09 Sep 2026

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading