மூன்று படுக்கைகளுடன் சிகிச்சை மற்றும் பயிற்சி வசதி
மூன்று மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தில், சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப மூன்று படுக்கைகள் கொண்ட சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதனுடன், ECMO உள்ளிட்ட சிக்கலான இதயம்–நுரையீரல் இயந்திரங்களை இயக்குவதற்கான நடைமுறைப் பயிற்சி வழங்கும் சிறப்பு உருவகப் பயிற்சி மையமும் உள்ளது.
இந்தப் பயிற்சி மையம், பிரிட்டனைச் சேர்ந்த இதய–மார்பு அறுவைச் சிகிச்சை நிபுணரும் ECMO துறையின் முன்னோடியுமான டொக்டர் ரிச்சர்ட் கே. ஃபிர்மின் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு நிகழ்வில் அவரும் கலந்துகொண்டார்.
ECMO என்பது நோயாளியின் இதயம் அல்லது நுரையீரல் போதுமான அளவில் செயல்படாதபோது, வெளிப்புற இயந்திரத்தின் உதவியுடன் இரத்தத்தில் ஆக்சிஜனைச் சேர்த்து, கார்பன் டைஆக்சைடை அகற்றும் மேம்பட்ட உயிர்காக்கும் சிகிச்சையாகும். இதன் மூலம் செயலிழக்கும் உறுப்புகளுக்கு ஓய்வும் மீட்சிக்கான கால அவகாசமும் கிடைக்கும்.
அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அவசரநிலை மேலாண்மை தொடர்பான பயிற்சியும் இங்கு வழங்கப்படும். Sri Lanka ECMO Centre, வழக்கமான சிகிச்சைகள் போதாமையாகும் தீவிர நோயாளிகளுக்கு கூடுதல் உயிர்வாழ்வு வாய்ப்பை வழங்கும் நோக்கத்துடன் செயல்படும்.
































