சாலைப் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு குறித்து கவனம்
ஸ்வீடன், பின்லாந்து மற்றும் நோர்வே நாடுகளின் அமைச்சர்களை அமைச்சர் சந்தித்தார். ஸ்வீடன் உட்கட்டமைப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் ஆண்ட்ரியாஸ் கார்ல்சன், பின்லாந்து போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் அமைச்சர் லுலு ரானே, நோர்வே போக்குவரத்து அமைச்சர் கம்ஸி குணரத்னம் ஆகியோருடன் அவர் பேச்சு நடத்தினார்.
இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் முன்னெடுக்கப்படும் சீர்திருத்தங்கள் குறித்து அமைச்சர் விளக்கமளித்தார். குறிப்பாக, அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்பு ஏற்படுத்தும் சாலை விபத்துகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் எடுத்துரைத்தார்.
ஸ்வீடன் பயணத்தின்போது அந்நாட்டின் போக்குவரத்து நிர்வாகம், தேசிய சாலை ஆலோசனை நிறுவனம், சாலை மற்றும் போக்குவரத்து ஆய்வு நிறுவனம், அத்துடன் ரயில் துறை நிறுவனமான அல்ஸ்டோம் ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் அமைச்சர் சந்தித்தார். உயிரிழப்புகள் மற்றும் கடுமையான காயங்களைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஸ்வீடனின் ‘விஷன் ஜீரோ’ சாலைப் பாதுகாப்பு திட்டத்தின் அம்சங்களை இலங்கையில் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், தொழில்நுட்ப நிபுணத்துவப் பரிமாற்றம், ஏற்கனவே உள்ள ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறைகளின் செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துதல் தொடர்பாக Sri Lanka Nordic transport cooperation வாய்ப்புகள் ஆராயப்பட்டன. ஸ்டாக்ஹோமில் மேம்படுத்தப்பட்டு வரும் ஸ்லுசன் பல்முனை போக்குவரத்து மையத்தையும் அமைச்சர் பார்வையிட்டார்.































