மேலும் அசாத் ஆட்சியின் இரசாயன ஆயுத திட்டத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் உயர்மட்ட இராணுவ அரசியல் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் உட்பட 18 பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச இரசாயன ஆயுதத் தடுப்பு அமைப்பு (OPCW) அதிகாரிகளுடன் இணைந்து பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த கண்டுபிடிப்புகள் இடம்பெற்றதாக சிரிய தரப்பு தெரிவித்துள்ளது. 14 ஆண்டுகள் நீண்ட உள்நாட்டு போருக்குப் பின்னர் சர்வதேச ஒத்துழைப்புடன் பழைய இரசாயன ஆயுதங்களின் தடயங்களை முற்றிலும் அகற்ற முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அசாத் ஆட்சியின் இரசாயன ஆயுத திட்டத்தின் எச்சங்கள் கண்டுபிடிப்பு
முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் ஆட்சிக் காலத்தில் செயல்பட்டதாகக் கூறப்படும் இரகசிய இரசாயன ஆயுத திட்டத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையின் போது சரின் நரம்பு வாயு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூலப்பொருட்கள் ஏவுகணைகள் விமானக் குண்டுகள் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.































