Tag: France 2025 update
பிரான்சில் வாகன ஓட்டுநர்கள் தங்களது கவனத்தினை குறித்த பயணத்தின் மேல் செலுத்தும் வகையிலும் வாகனத்தை செலுத்தும் வேளையில் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பிரான்ஸ் அரசினால் இந்த நடவடிக்கை மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளது. சில முக்கிய நிபந்தனைகளின் அடிப்படையில் நீங்கள் உங்கள் வாகனங்களை செலுத்தும் வேளையில் ஜிபிஎஸ் மற்றும் கூகுள் மேப் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு பிரான்ஸ் அரசு உங்களை அனுமதிக்கிறது. ✅ GPS & Navigation பயன்பாட்டிற்கான அனுமதி ✔️ கேபிள் அல்லது ஸ்டாண்டில் (Holder) மவுண்ட் செய்யப்பட்டிருக்கும் […]
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு பயணிக்க விரும்பும் பயணிகள் ஏப்ரல் 2, 2025 முதல் மின்னணு பயண அங்கீகாரம் (Electronic Travel Authorization – ETA) பெறுவது கட்டாயமாகும். இந்த ETA ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மேலும் மார்ச் 5, 2025 முதல் விண்ணப்பங்கள் பெறப்படும். ETA இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் அல்லது பயணியின் பாஸ்போர்ட் காலாவதியாகும் வரை (எது முதலில் வருகிறதோ) செல்லும். இதற்கான கட்டணம் தற்போது £10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பிரித்தானியாவுக்கு வரும் ஐரோப்பிய […]
பிரான்சில் இருந்து 140,000 பேர் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற OQTF (Obligation de Quitter le Territoire Français) ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, இது பிரான்சின் குடியேற்றக் கொள்கைகளின் ஒரு பகுதியாகும். சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்களை வெளியேற்றுவதற்காக இந்த ஆணைகள் வழங்கப்படுகின்றன. OQTF ஆணை பெறுபவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் (சாதாரணமாக 30 நாட்கள்) பிரான்சை விட்டு வெளியேற வேண்டும். இது பல்வேறு காரணங்களுக்காக வழங்கப்படலாம்உதாரணமாக OQTF ஆணை பெறுபவர்கள் இந்த ஆணையை எதிர்த்து நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் மேல்முறையீடு […]
பிரான்சில் சட்டவிரோத (அனுமதியில்லா) குடியேறிகள் திருமணம் செய்வது சட்டபூர்வமாக சாத்தியமானதாகும். ஐரோப்பிய மனித உரிமை ஒப்பந்தத்தின் (ECHR) 12ஆம் பிரிவின்படி திருமணமானது ஒரு அடிப்படை மனித உரிமையாக கருதப்படுகிறது. எனவே குடியேற்ற அனுமதி இல்லாதவர்கள் திருமணம் செய்வதை பிரான்சு அரசு தடுக்க முடியாது. ஆனால் இதற்கான சில முக்கிய சட்டப்பூர்வ நடைமுறைகள் மற்றும் சிக்கல்கள் உள்ளன. திருமணத்திற்கு பிறப்புச் சான்றிதழ், திருமணத் தடை இல்லாத சான்றிதழ் (CNI), அடையாள ஆவணங்கள், மற்றும் குடியிருப்பு சான்றிதழ் போன்றவை தேவையாகும். […]
பிரான்ஸ் அரசாங்கத்தின் Caisse d’Allocations Familiales (CAF) மூலம் வழங்கப்படும் நலன்கள் வருமானம், குடும்பத்தினரின் எண்ணிக்கை மற்றும் தகுதியின் அடிப்படையில் மாறுபடும். சமீபத்தில், சிலர் €2,000 மாத சம்பளம் பெறுபவர்கள் கூடுதல் €400 ஷாப்பிங் உதவியாக பெறுகிறார்களா? என்ற கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், CAF இந்த மாதிரியான எந்தவொரு நேரடி ஷாப்பிங் உதவகளை வழங்குவதில்லை என அறிவித்துள்ளது. CAF நலன்கள் பெரும்பாலும் பிரான்சில், Caisse d’Allocations Familiales (CAF) பல்வேறு நலன்களை வழங்குகிறது, அவற்றில் சில முக்கியமானவை: […]
பிரான்சில், 2025 பெப்ரவரி 19 ஆம் தேதி முதல், உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள், அவர்கள் வழங்கும் அனைத்து இறைச்சி வகைகளுக்கும் (மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி, ஆடிறைச்சி, கோழியிறைச்சி, வாத்திறைச்சி மற்றும் பிறவை) மூலநாட்டை, வெட்டப்பட்ட தேதியை, மற்றும் வெட்டியவரின் பெயரை வெளிப்படையாகக் காட்ட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த விதிமுறை மாட்டிறைச்சிக்கு மட்டும் நடைமுறையில் இருந்தது, தற்போது அனைத்து இறைச்சி வகைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு €1,500 முதல் €3,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்த […]