ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு பயணிக்க விரும்பும் பயணிகள் ஏப்ரல் 2, 2025 முதல் மின்னணு பயண அங்கீகாரம் (Electronic Travel Authorization – ETA) பெறுவது கட்டாயமாகும்.
இந்த ETA ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மேலும் மார்ச் 5, 2025 முதல் விண்ணப்பங்கள் பெறப்படும். ETA இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் அல்லது பயணியின் பாஸ்போர்ட் காலாவதியாகும் வரை (எது முதலில் வருகிறதோ) செல்லும். இதற்கான கட்டணம் தற்போது £10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது பிரித்தானியாவுக்கு வரும் ஐரோப்பிய பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை கொண்டு வருவதாகும். ETA இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கப்படாது என்பதால், உங்கள் பயணத்துக்கு முன்பாக இதனைப் பெறுவது அவசியம்.
ETA யாருக்கு தேவையானது:
- பிரித்தானியாவுக்கு பயணிக்க அல்லது வழியாக செல்லும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடியுரிமை உள்ள பயணிகள்.
ETA யாருக்கு தேவையில்லை:
- பிரித்தானிய அல்லது அயர்லாந்து குடியுரிமை பெற்றவர்கள்.
- பிரித்தானியாவில் ‘Settled’ அல்லது ‘Pre-settled’ நிலை பெற்றவர்கள்.
ETA பதிவு செய்யும் முறைகள்
எனவே எதிர்வரும் ஏப்ரல் 2, 2025 முதல் உங்களுடைய பயணத்திற்கு முன்னர் ETA பதிவினை உறுதி செய்து கொள்ளுங்கள்.





Leave a Reply