சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று (மார்ச் 6, 2025) அவரது பத்தரமுல்லை இல்லத்தில் குற்றப்புலனாய்வு துறை (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது கெலனியா பகுதியில் நிலம் தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்து நிதி மோசடி செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கமைவாகும் பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேர்வின் சில்வா, இலங்கை அரசியலில் சர்ச்சைக்குரிய நபராக அறியப்படுகிறார். முன்னதாக, 2011ஆம் ஆண்டில் சிலாபம் முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற இருந்த மிருக பலிபூஜையை தடுத்து நிறுத்தியுள்ளார்.

13 வது திருத்தச் சட்டம் தொடர்பான சர்ச்சையை தூண்டியவர்.

போலியான விகாரையொன்று தலதா மாளிகையைப் பின்பற்றி கட்டப்பட்டதாகவும் அதை இரண்டு வாரங்களுக்குள் இடித்துவிட்டு வித்தியாசமான முறையில் கட்டுமாறும் கீழ்ப்படியவில்லை என்றால் இப்போதே இதனை உடைப்பேன் என்றும் கூறியவர்.

புத்த மதபோதகர் மேலோ அல்லது விகாரைகள் மீதோ கை வைத்தால் தமிழர்களின் தலைகளை வெட்டுவேன் என்று கூறியவர் மற்றும் அரசியல் என்ற போர்வையில் மக்களிடையே இனவாதம் தூண்டிய முக்கிய அமைச்சராக மக்களால் பார்க்கப்படுபவர்.

தொடர்ந்து மேலதிக விசாரணைகளுக்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்