கிரிபத்கொடவில் அரசிற்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்ய முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக சட்டமா அதிபர் புதன்கிழமை (15) கம்பகா உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
கம்பகா உயர் நீதிமன்ற நீதிபதி நயன செனவிரத்ன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்ட ஆலோசகர் சமதாரி பியசேன குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப்பத்திரிகைகளை வழங்கினார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோருடன் நவீன் வீரகோன் மில் ராய் பெரேரா ஜயந்த கப்ரால் மற்றும் சரத் எதிரிசிங்க ஆகியோரும் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
கிரிபத்கொட பகுதியில் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களின் மூலம் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன.













Leave a Reply