✔️ கேபிள் அல்லது ஸ்டாண்டில் (Holder) மவுண்ட் செய்யப்பட்டிருக்கும் போது மட்டுமே பயன்படுத்தலாம்.
✔️ காரில் உள்ள உட்பொதிக்கப்பட்ட (Built-in) GPS முறைகள் பயன்படலாம்.
✔️ வாய்வழி கட்டுப்பாடு (Voice Command) மூலம் Google Maps / GPS பயன்படுத்தலாம்.
✔️ கணினி பேச்சு வழியில் (Voice Navigation) வழிமுறைகளை கேட்டுக்கொள்ளலாம்.
கீழ்காணும் சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் உங்களுக்கு அபராத தொகை விதிக்கப்படக்கூடிய சந்தர்ப்பம் அத்துடன் உங்களது ஓட்டுன உரிமம் மீதான தடையை அமல்படுத்துவதற்கான சந்தர்ப்பமும் உருவாக்கப்படும்.
🚫 GPS பயன்பாட்டில் தடை & அபராதம்
❌ கைபேசியை கையில் பிடித்துக் கொண்டு பயன்படுத்துதல் – தடை
❌ செயலியை தொடுவதோ அல்லது கைபேசியில் திரை திருத்துவதோ (Touch) – தடை
❌ Radar / Speed Camera கண்டறியும் GPS பயன்பாடு – மிகப்பெரிய அபராதம்
வாகனங்களைச் செலுத்தும் வேளையில் கையில் உங்களது தொலைபேசிகளை வைத்து நீங்கள் ஜிபிஎஸ் மற்றும் கூகுள் மேப்பை பயன்படுத்தினால் அபராத தொகையாக 135 Euro மற்றும் உங்களது வாகன ஓட்டுன உரிமத்தின் மீதான 3 புள்ளிகளும் நீக்கப்படும்
அல்லது நீங்கள் வாகனத்தை செலுத்தும் வேளையில் உங்களுடைய தொலைபேசியை பயன்படுத்தி உள்ளீர்கள் என்பது வேக கண்காணிப்பு கேமராவினால் உறுதி செய்யப்படும் பட்சத்தில் உங்களுக்கான அபராத தொகை 1500 Euro அத்துடன் உங்களது வாகன ஓட்டுன உரிமம் இடைநீக்கம் செய்யப்படும்.
எனவே பிரான்ஸ் நாட்டில் வாகன ஓட்டுனர்கள் உங்களது பயணத்தை தொடங்கும் முன்னரே இவ்வாறான ஜிபிஎஸ் மற்றும் கூகுள் மேப் பினூடாக நீங்கள் பயணம் செல்ல விரும்பும் இடங்களை முன்கூட்டியே தெரிவு செய்து வாகனத்தில் உரிய முறையில் பொருத்தி அதன் பின்னர் உங்களது பயணங்களை ஆரம்பிங்கள். அவ்வாறு இல்லாது மேற்குறிப்பிடப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் மேற்குறிப்பிடப்பட்ட அபராத தொகைகளும் உங்களுக்கு விதிக்கப்பட்டு உங்களது வாகன ஓட்டுன உரிமங்களும் இடைநீக்கம் செய்யக்கூட கூடிய சந்தர்ப்பம் உருவாகும்.





























