Tag: Gulf
ஹோர்முஸ் நீரிணையில் புதிய கப்பல் போக்குவரத்து பாதையை அமைப்பதற்கான முக்கிய முன்னேற்றத்தை ஈரானும் ஓமானும் எட்டியுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு மற்றும் கப்பல் இயக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளியான தகவல்களின்படி வளைகுடாவிற்குள் நுழையும் கப்பல்களுக்கான புதிய கடற்பாதையை ஈரான் நிர்வகிப்பதையும் வெளியேறும் கப்பல்களுக்கான பாதையை ஓமான் நிர்வகிப்பதையும் உள்ளடக்கிய திட்டம் குறித்து இரு […]
ஹோர்முஸ் நீரிணையில் அனுமதியின்றி நுழைந்ததாகக் கூறி தாய்லாந்து கொடியுடன் பயணித்த ஒரு சரக்கு கப்பலை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) கடற்படை குறிவைத்ததாக ஈரானின் அரசுக்கு நெருக்கமான Tasnim செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த கப்பல் IRGC வழங்கிய எச்சரிக்கைகளை புறக்கணித்து அனுமதி பெறாமல் ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைய முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கப்பல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து தாய்லாந்து அதிகாரிகளோ அல்லது கப்பல் நிறுவனமோ உடனடி […]
அமெரிக்கா ஈரான் தாக்குதல், ஹோர்முஸ் கடற்பாதையில் (Strait of Hormuz) பயணித்த சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் மீது நடைபெற்றதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்பு தளங்கள் கடலோர ரேடார் அமைப்புகள் உள்ளிட்ட பல இராணுவ இலக்குகள் மீது வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த தாக்குதல் சமீபத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் என குற்றஞ்சாட்டியுள்ளார். இதேவேளை தாக்குதல் நடத்தப்பட்டதாகக் […]
குவைத் பாதுகாப்பு தொடர்பாக எந்த அச்சுறுத்தலும் இல்லை. குவைத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தல்களும் பதிவாகவில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பிராந்திய பதற்றங்கள் நிலவிவரும் சூழலில் பாதுகாப்பு மற்றும் இராணுவப்படைகள் முழுமையான தயார்நிலையிலும் உயர்ந்த எச்சரிக்கையிலும் செயல்பட்டு வருகின்றன. மேலும் முன்னர் நடைபெற்ற பாதுகாப்பு தலையீடுகளின் போது விழுந்த சிதறல் பொருட்கள் தொடர்பாக பல புகார்கள் கிடைத்துள்ளன அவற்றை வெடிகுண்டு நீக்கம் அணிகள் திறம்பட கையாளுகின்றன. அதிகாரிகள் […]