Tag: Hormuz Strait
ஈரானின் முன்னாள் உயரிய தலைவரின் இறுதிச் சடங்கில் புதிய உச்ச தலைவராகக் கருதப்படும் மொஜ்தபா கமேனி பங்கேற்காததற்கு நாட்டில் நீடித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் முழுமையாக முடிவுக்கு வராத போர் சூழலே முக்கிய காரணம் என தெஹ்ரான் பல்கலைக்கழக ஆராய்ச்சி அறிஞர் முகமது இஸ்லாமி தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே தற்போது மிகவும் பலவீனமான போர் நிறுத்தம் மட்டுமே அமலில் இருப்பதாகவும் பல சிக்கலான விடயங்கள் […]
சர்வதேச அளவில் மசகு எண்ணெய் உற்பத்தி செய்யும் முன்னணி நாடுகளின் கூட்டமைப்பான OPEC+ வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நாளாந்த எண்ணெய் உற்பத்தியை மேலும் 188,000 பீப்பாய்களால் அதிகரிக்க கொள்கை ரீதியாக உடன்பாடு கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கில் நிலவிய பதற்ற நிலைமை தணிந்து உலகின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி கடல்வழியான ஹோர்முஸ் நீரிணை படிப்படியாக மீண்டும் திறக்கப்பட்டு வருவதும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்து வருவதும் இந்தத் தீர்மானத்திற்கு முக்கிய காரணங்களாகக் […]
அமெரிக்கா ஈரான் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் தொடங்க உள்ளதால் உலக கவனம் அதில் குவிந்துள்ளது. அதேவேளை ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக புதிய பதற்றம் உருவாகியுள்ளது.முதலில் ஈரான் அந்த நீரிணை மூடப்பட்டதாக அறிவித்தது. ஆனால் அமெரிக்கா அந்தக் கூற்றை உடனடியாக மறுத்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இரு தரப்பும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பியுள்ளன. மேலும் ஈரான் உயர்மட்ட குழு சுவிட்சர்லாந்தை வந்தடைந்துள்ளது. அதேபோல் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் முக்கிய […]
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரானின் கடலோர கண்காணிப்பு ரேடார் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) வெளியிட்ட தகவலின்படி ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க படைகள் மற்றும் கூட்டணி கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகக் கூறப்படும் ஈரானிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஈரானின் கடலோர ரேடார் நிலையங்கள் இலக்காகக் கொண்டு துல்லியத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கை தற்காப்பு நோக்கத்திலானது […]
அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக தெரிவித்துள்ள நிலையில் “வார்த்தைகள் அல்ல நடைமுறை நடவடிக்கைகளே தேவை” என ஈரான் பதிலளித்துள்ளது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போர்நிறுத்தத்தை மேலும் 60 நாட்கள் நீட்டிக்கும் முன்மொழிவு குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படலாம் என தெரிவித்தார். ஆனால் ஈரான் அணு ஆயுதங்களை ஒருபோதும் பெறக்கூடாது ஹோர்முஸ் நீரிணை எந்தக் கட்டணமும் இன்றி முழுமையாக திறக்கப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் நிபந்தனைகள் மீது இரு தரப்புக்கும் […]
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து அமெரிக்க கச்சா எண்ணெய் (U.S. crude) எதிர்கால விலைகள் 6 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளன. அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றத்தை குறைக்கும் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருவதாக வெளியான தகவல்கள் சந்தைகளில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை மீண்டும் வழமையான கப்பல் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் சீராகும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே உருவாகியுள்ளது. இதன் […]
அமெரிக்கா ஈரான் ஒப்பந்தம் இறுதி நிலையை அடைய இன்னும் சில நாட்கள் பிடிக்கக்கூடும் என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இதேவேளை அமெரிக்கப் படைகள் தெற்கு ஈரானில் புதிய “தற்காப்பு தாக்குதல்கள்” மேற்கொண்டதாக வாஷிங்டன் அறிவித்துள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் தகவலின்படி அமெரிக்கப் படைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த ஏவுகணை தளங்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகள் பதிக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட இலக்குகள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அமெரிக்கா ஈரான் ஒப்பந்தம் உடனடி முன்னேற்றம் கிடைக்கும் […]
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) கப்பல்களின் இயக்கம் மெதுவாக மீண்டும் தொடங்கியுள்ளதாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன. கத்தாரில் இருந்து LNG ஏற்றிச் சென்ற “Fuwairit” என்ற கப்பல் தற்போது பாகிஸ்தானை நோக்கிப் பயணிக்கிறது அதேவேளை ஈராக் பஸ்ரா கச்சா எண்ணெய் ஏற்றிய “Eagle Verona” என்ற மிகப்பெரிய எண்ணெய் கப்பல் சீனாவை நோக்கி வளைகுடாவை விட்டு புறப்பட்டுள்ளதாக […]
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் அடைந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததைத் தொடர்ந்து உலகளாவிய நிதிச் சந்தைகளில் நேர்மறை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆசிய பங்குச்சந்தைகள் பெரும்பாலும் உயர்வைப் பதிவு செய்துள்ளதுடன் எண்ணெய் விலைகள் கணிசமாக குறைந்துள்ளன. குறிப்பாக ஜப்பானின் நிக்கெய் குறியீடு பலத்த உயர்வைக் கண்ட நிலையில் முதலீட்டாளர்கள் மத்திய கிழக்கு பதற்றம் குறையக்கூடும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படலாம் உலகளாவிய […]
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிலை முடிவுக்கு வரும் வகையில் முக்கியமான சமாதான ஒப்பந்தம் உருவாகும் அறிகுறிகள் தென்படுகின்றன என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் Marco Rubio தெரிவித்துள்ளார். ஸ்வீடனுக்கு பயணம் மேற்கொள்ளும் முன் ஊடகங்களிடம் பேசிய அவர் “சில நல்ல முன்னேற்றங்கள் காணப்படுகின்றன ஆனால் அதிக நம்பிக்கையுடன் இருக்க விரும்பவில்லை” என்று குறிப்பிட்டார். ஈரானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் நடுநிலை வகித்து வருவதாகவும் விரைவில் முக்கிய முடிவுகள் எட்டப்படலாம் என்றும் அவர் கூறினார். அதேவேளை ஹோர்முஸ் […]