Tag: SJB
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சட்டவிரோதமாக ரீப்பீட்டர் வகை துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி எவ்வாறு அவரது வசம் வந்தது அது சட்டவிரோதமாகப் பெறப்பட்டதா மேலும் ஏதேனும் குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்டதா என்பது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் பலர் உயிரிழந்த விவகாரத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முழுப் பொறுப்பேற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் தற்போதைய ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் சிறைச்சாலைகளில் கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்களுக்கு அப்போதைய அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்ததை நினைவூட்டினார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் 2020 நவம்பர் […]
மத்திய கிழக்கில் ஏற்பட்டிருந்த யுத்தம் முடிவடைந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் குறைந்துள்ள நிலையில் அரசாங்கம் உடனடியாக எரிபொருட்களின் விலையை குறைத்து அதன் நன்மையை மக்களுக்கு வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் மத்திய கிழக்கில் யுத்தம் ஆரம்பமானபோது உலக சந்தை நிலவரத்தை காரணம் காட்டி அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்தியதாகவும் […]
டொலரின் பெறுமதி உயர்வடைவது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என அரசாங்கம் முன்வைத்து வரும் கருத்துக்கள் எந்தவித அடிப்படையும் அற்றவை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் திங்கட்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் டொலரின் பெறுமதி அதிகரிக்கும் போது நாட்டின் வெளிநாட்டு கடன்களை ரூபாய் மதிப்பில் மீளச் செலுத்த வேண்டிய சுமை பல மடங்கு அதிகரிக்கும் என்றும் அதன் […]
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அரசாங்கம் டொலர் பெறுமதி உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் அமெரிக்காவின் வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஆடை இறப்பர் ஏற்றுமதித் துறைகளின் வீழ்ச்சியை கட்டுப்படுத்தத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டினார். இதனால் மக்களின் ஆதரவை இழந்துள்ள அரசாங்கம் தேர்தல்களை நடத்த அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் அரசாங்கத்துக்கு உண்மையான மக்கள் ஆதரவு இருந்தால் உடனடியாக மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் […]