சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அரசாங்கம் டொலர் பெறுமதி உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் அமெரிக்காவின் வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஆடை இறப்பர் ஏற்றுமதித் துறைகளின் வீழ்ச்சியை கட்டுப்படுத்தத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

இதனால் மக்களின் ஆதரவை இழந்துள்ள அரசாங்கம் தேர்தல்களை நடத்த அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் அரசாங்கத்துக்கு உண்மையான மக்கள் ஆதரவு இருந்தால் உடனடியாக மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என சவால் விடுத்தார். தற்போதைய சூழலில் ஆளுங்கட்சி 20 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெறும் எனவும் அவர் கூறினார்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading