குறிப்பாக, சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதையும், அதிகாரம் அல்லது செல்வாக்கு உள்ளவர்களுக்கும் சட்டத்தின் கீழ் பொறுப்பேற்க வேண்டிய அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார்.மேலும், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரசுப் பண நிதி தவறாக பயன்படுத்தப்படுவது போன்ற செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிபர் தெரிவித்தார்.
நீதித்துறை மற்றும் விசாரணை அமைப்புகள் தன்னிச்சையாக செயல்படுவதற்கு அரசு இடையூறு செய்யாது என்றும் அவர் உறுதி அளித்தார். மக்கள் மத்தியில் நீண்டகாலமாக நிலவி வந்த “சிலருக்கு மட்டும் சட்டம், மற்றவர்களுக்கு இல்லை” என்ற எண்ணத்தை மாற்றுவதே இந்த நடவடிக்கைகளின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லாட்சியை உருவாக்கும் முயற்சிகளில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும் அனைத்து இன, மத மக்களும் சமமாக நடத்தப்படும் ஒரு நாட்டை உருவாக்குவது தான் இறுதி இலக்கு என்றும் அதிபர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் சமூக மாற்றங்களின் பின்னணியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.



























