சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை பதவியிலிருந்து விலகுமாறு கோரி அரசாங்க ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் அரசாங்கத்தின் திட்டமிட்ட அரசியல் நாடகமென சர்வஜன அதிகாரம் கட்சியின் கம்பஹா மாவட்ட முதன்மை அமைப்பாளரும் தொழிலதிபருமான ஜயந்த அத்துகோரள குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணத் தவறிய அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதாக தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தவறான பொருளாதார மற்றும் நிதி நிர்வாக நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு மத்திய வங்கி ஆளுநரை மட்டும் பலிகடாவாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார். அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தின் விளைவுகளை மறைத்து தற்போதைய தோல்விகளுக்கான பொறுப்பை வேறு தரப்பினர்மீது சுமத்தும் முயற்சியாகவே இந்த போராட்டம் அமைந்துள்ளதாகவும் ஜயந்த அத்துகோரள சுட்டிக்காட்டினார்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்