சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

இலங்கையில் நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டு வரும் மாகாண சபை தேர்தல்களை மேலும் தாமதிக்காமல் நடத்துவதற்கான உத்தியோகப்பூர்வ திகதியை ஜனாதிபதி அடுத்த 30 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளர் கலாநிதி சுரேன் ராகவன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாகாண சபை முறைமை முடக்கப்பட்டிருப்பதால் மக்களின் அரசியல் கலாசார மற்றும் பொருளாதார உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தேர்தல்களை நடத்துவது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகும் என்றும் அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் அரசாங்கத்தின் நிதி ஆதாரங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்