சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

தற்போதைய அரசாங்கம் வீழ்ச்சியடைந்தால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்து, கடந்த காலத்தில் நாட்டை வழிநடத்தியது போல் உதவுவார் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (26.12.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

ரணில் விக்ரமசிங்கவுக்கு தற்போதைய நாடாளுமன்றத்திற்கு வருவதில் எந்தவித ஆர்வமும் இல்லை எனவும், அது தொடர்பில் அவர் தனிப்பட்ட முறையில் தெரிவித்ததாகவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

“இந்த நாடாளுமன்றத்திற்கு வருவதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை என்று ரணில் விக்ரமசிங்க என்னிடம் கூறியுள்ளார். நாடாளுமன்றத்திற்கு வந்தால் ஏதாவது செய்யக்கூடிய சூழ்நிலை இருக்க வேண்டும். தற்போது உள்ள உறுப்பினர்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்,” என ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மேலும், “நான் ஜனாதிபதி பதவியை அடைந்துவிட்டேன். இனி எந்த பதவிகளையும் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நாட்டிற்கு எனது உதவி தேவைப்பட்டால், கடந்த முறை போல வந்து உதவ தயாராக இருக்கிறேன்” என ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, தாம் செல்லும் பல இடங்களிலும் மக்கள் ரணில் விக்ரமசிங்க மீது அனுதாபம் தெரிவிப்பதாகவும், “அவர் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது”, “நாட்டில் சிறந்த சூழ்நிலை உருவாகியிருக்கும்” என மக்கள் கூறுவதாகவும் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

மேலும், பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளிலும் இதே கருத்து பிரதிபலிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்