இதனை உறுதிப்படுத்தும் வகையில் 2020 நவம்பர் 30 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அநுர குமார திசாநாயக்க ஆற்றிய உரையின் காணொளியையும் அவர் வெளியிட்டார். அப்போது முன்வைக்கப்பட்ட அதே நிலைப்பாடு தற்போதைய அரசாங்கத்திற்கும் பொருந்த வேண்டும் என்றும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் பல உயிர்கள் பறிக்கப்பட்டுள்ள நிலையில்,அரசாங்கத்தின் தலைவராக ஜனாதிபதி இந்தச் சம்பவத்திற்கான பொறுப்பிலிருந்து விலக முடியாது என்றும் ரஞ்சித் மத்துமபண்டார குறிப்பிட்டார்.
மேலும் நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதிலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அவர், சம்பவம் தொடர்பாக உடனடியாக சுயாதீனமான மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, உண்மைகள் பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.































