இலங்கை வர்த்தக சபைத் தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு, உள்ளூர் வணிக சமூகத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு.
பாதகமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் நாட்டின் பொது வாழ்க்கையை மீட்டெடுக்கும் திட்டத்திலும் உள்ளூர் வணிக சமூகத்தின் வலுவான ஆதரவை அரசு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நேற்று (29) இரவு முப்படை தலைமையகத்தில் நடைபெற்ற இலங்கை வர்த்தக சபையுடனான சிறப்பு கலந்துரையாடலில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு கூறினார். நாட்டின் தற்போதைய அவசரகால நிலைமையை சமாளிக்க அரசு முன்னெடுத்து வரும் நிவாரணத் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி வணிக தலைவர்களுக்கு விரிவாக விளக்கினார். […]
