ஹோட்டல் அறையில் நள்ளிரவில் ஏற்பட்ட வாக்குவாதம்
அசாம் மாநிலம் உடல்புரி மாவட்டத்தைச் சேர்ந்த அபிஜித் கிண்டோ, குரியா என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். குரியா சென்னையில் தங்கி இருந்தார். அவர் மேலும் இரண்டு பெண்களுடன் அசாமில் உள்ள கம்ரூப் அருகே உள்ள ரங்கியா ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.
அவர்களை வரவேற்க கிண்டோ ரயில் நிலையத்துக்குச் சென்றார். பின்னர் மூவரையும் அங்குள்ள ஹோட்டலில் தங்கவைத்தார். கிண்டோவும் அதே ஹோட்டலில் தனியாக ஒரு அறை எடுத்துத் தங்கினார். குரியா தனி அறையில் தங்கியிருந்தார்.
நள்ளிரவில் குரியா தங்கியிருந்த அறைக்கு கிண்டோ மெதுவாகச் சென்றார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், தன்னுடன் ஏற்கெனவே எடுத்துச் சென்றிருந்த இரண்டு கத்தரிக்கோலால் குரியாவை சரமாரியாகக் குத்தியதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் சரிந்த குரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காலையில் பக்கத்து அறையில் தங்கியிருந்த குரியாவின் தோழிகளிடம், அவரைக் கொலை செய்துவிட்டதாக கிண்டோ தெரிவித்தார். அதோடு தற்கொலைக்கும் முயன்றதாக கூறப்படுகிறது. இந்த Assam hotel murder குறித்து அவர் அளித்த பேட்டியில், குரியா தன்னிடம் துரோகம் செய்துகொண்டிருந்ததாகவும், மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்ததாகவும் கூறினார். சென்னையில் இருந்து அவர் வருவதற்கு முன்பே கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும் கிண்டோ தெரிவித்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து கிண்டோவை கைது செய்தனர். அவரது உடலில் காயங்கள் இருந்ததால் மருத்துவமனையில் சேர்த்தனர். கத்தரிக்கோல் மற்றும் டெஸ்டரைப் பயன்படுத்தி குரியாவைத் தாக்கியதாக போலீஸார் தெரிவித்தனர். கூடுதல் பரிசோதனைகள் மற்றும் தடயங்களைச் சேகரிக்க கவுகாத்தியிலிருந்து தடயவியல் நிபுணர்கள் குழு ஹோட்டலுக்கு வந்தது.




























