பரிசளிப்பு விழாவில் இந்திய வீராங்கனைகள் கோப்பையைப் பெற மேடைக்கு முன்வரவில்லை. இதனால், நக்வியும் மற்ற அதிகாரிகளும் சாம்பியன் அணிக்காக மேடையில் காத்திருந்தனர். இந்திய அணியின் இந்த முடிவு, இந்தியா–பாகிஸ்தான் இடையிலான தொடரும் அரசியல் பதற்றங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.
இலங்கை அணி இரண்டாம் இடக் காசோலையைப் பெற்றது
மறுபுறம், இலங்கை அணி பரிசளிப்பு விழாவில் பங்கேற்று, இரண்டாம் இடத்துக்கான காசோலையை ஏற்றுக்கொண்டது. நக்வி பாகிஸ்தான் உள்துறை அமைச்சராகவும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராகவும் உள்ளார். இந்தப் பதவிகள் காரணமாகவே இந்திய அணி அவரிடமிருந்து India Women Asia Cup trophy-யைப் பெற விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, 2025ஆம் ஆண்டு ஆண்கள் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இந்திய அணி பட்டம் வென்ற பின்னர் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற மறுத்திருந்தது.
































