இங்கிலாந்தில் ஈரானுடன் தொடர்புடைய நான்கு உளவாளிகள் கைது
இங்கிலாந்தின் லண்டன் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யூத சமூகம் தொடர்பான இடங்களை கண்காணித்து உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை பிரித்தானிய எதிர்தீவிரவாத (Counter-Terrorism) போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், மற்றவர்கள் இரட்டை குடியுரிமை (பிரிட்டிஷ்–ஈரான்) கொண்டவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கைகள் லண்டன் அருகிலுள்ள Barnet, Harrow மற்றும் Watford பகுதிகளில் முன்னெச்சரிக்கை திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. […]
