இங்கிலாந்தின் லண்டன் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யூத சமூகம் தொடர்பான இடங்களை கண்காணித்து உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை பிரித்தானிய எதிர்தீவிரவாத (Counter-Terrorism) போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், மற்றவர்கள் இரட்டை குடியுரிமை (பிரிட்டிஷ்–ஈரான்) கொண்டவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கைகள் லண்டன் அருகிலுள்ள Barnet, Harrow மற்றும் Watford பகுதிகளில் முன்னெச்சரிக்கை திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சந்தேகநபர்கள் 22 முதல் 55 வயதுக்குள் உள்ளவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த விசாரணையுடன் தொடர்புடையதாக மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக பலரை விசாரணைக்காக போலீசார் தடுத்து வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தப்பட்ட வீடுகள் மற்றும் இடங்களில் போலீசார் தொடர்ந்து சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். இங்கிலாந்தில் ஈரான் தொடர்புடைய உளவு நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன என்ற பாதுகாப்பு அச்சத்தின் பின்னணியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading