உலகை சுற்றும் லக்ஷுரி கப்பல் பயணம் ஒன்று திடீரென நிறுத்தப்பட்டதால் பல பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Vasco da Gama என்ற சொகுசு கப்பலில் நடந்த இந்த 175 நாட்கள் உலக சுற்றுலா ஆரம்பத்திலேயே பல சிக்கல்களை சந்தித்தது.
திட்டமிட்ட துறைமுகங்கள் ரத்து செய்யப்பட்டது மற்றும் பாதை மாற்றங்கள் தொடர்ந்து ஏற்பட்டதால் பயணம் சரியாக நடைபெறவில்லை.
இந்த பயணம் மிகவும் விலையுயர்ந்தது முழு பயணத்திற்கான கட்டணம் சுமார் 34,500 யூ உலக சுற்றுலா ரோ வரை இருந்தது. ஆனால் இந்த “கனவு பயணம்” பயணிகளுக்கு ஒரு துயரமான அனுபவமாக மாறியது. இறுதியில் ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த சுமார் 200 பயணிகள் லிஸ்பன் நகரில் கப்பலை விட்டு இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது பின்னர் அவர்கள் விமானம் மூலம் வீடு திருப்பப்பட்டனர்.
இந்த திடீர் நிறுத்தத்திற்கு முக்கிய காரணம் கப்பலில் ஏற்பட்ட ஒரு பெரிய தொழில்நுட்ப கோளாறு. குறிப்பாக கப்பலின் propeller (இயக்க அமைப்பு) செயலிழந்ததால் வேகம் மிகவும் குறைந்தது இதனால் பெரிய தாமதங்கள் ஏற்பட்டன.
இதனால் பல இடங்களை சென்றடைய முடியாமல் போனது. ஆனால் பயணிகளின் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் உலக அரசியல் நிலைமைகளும் இந்த பயணத்தை சிரமப்படுத்தியது சில பாதைகள் மாற்றப்பட்டு கப்பல் ஆப்ரிக்கா சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது கப்பல் பிரான்சின் Brest துறைமுகத்தில் பழுது பார்க்கப்படுகிறது ஆனால் இது எப்போது சரியாகும் என்பது தெரியவில்லை. இதனால் அடுத்த திட்டமிடப்பட்ட பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!
WhatsApp / Call: +94 76 572 9042













Leave a Reply